ayurvedic treatment for rheumatoid arthritis

Rheumatoid Arthritis: Symptoms, Causes And Ayurvedic Medicine

Rheumatoid Arthritis is one of the major and common health complications in India. It is a chronic inflammatory disease which, apart from affecting the joints, can also affect different organs, including the heart, lungs, blood vessels, eyes, and skin. Continue reading

25251499775_c0e662dec6_k

Knee Pain Don’ts

If your knee joints aren’t healthy, even simple activities such as walking and climbing stairs will be extremely difficult. You can use Ayurvedic medicine to relieve symptoms of knee pain, but there are certain activities that you should avoid to ensure that your condition doesn’t worsen. Here we discuss 9 don’ts when you have knee pain – Continue reading

ayurvedic living

10 Pieces Of Ayurvedic Wisdom

New Year is the perfect time to start afresh. It’s the most exciting time of the year for new beginnings, new promises, and commitments. It’s the perfect time to cleanse your mind, body, and spirit; and there is no better way to do that than embracing Ayurveda. So, if you have made a commitment to turn into a healthy version of you, we can offer some help.  Here are some tips to embrace a holistic approach to health this year: Continue reading

history of ayurveda

History Of Ayurveda: A Brief Overview

Ayurveda, one of the oldest traditional systems of medicine, originated in the Indian subcontinent. With a rich history that dates back to more than 5000 years, Ayurveda was mainly practised by the sages during the Vedic civilisation. It is said that the main source of knowledge for Ayurveda was derived from the Vedas, the holy books of knowledge. Continue reading

blog

Joint Pain – Know The Causes and Treatment

Joint pain is one of the most common health problems faced by people all over the world. It affects men and women equally and can affect people of all age (the condition is more common in older people). Joint pain is a major health problem in India. Here, we have presented all that there’s to know about joint pain: Continue reading

ayurvedic medicine for cough

Bronchitis: Types, Causes, And Symptoms

It’s not unusual to catch cold or suffer from flu during winters. If it’s not serious, then the symptoms go away in a few days; however, there are times when a simple cold can turn really bad. Bronchitis has similar symptoms like cold. While the symptoms of cold may be over in a week but if it’s Bronchitis, it will keep lingering for weeks. Let’s take a closer look at the causes and symptoms of Bronchitis. Continue reading

25251499775_c0e662dec6_k

மூட்டு வலி – காரணங்களையும் சிகிச்சைகளையும் அறியுங்கள்

உலகெங்கும் உள்ள  மக்கள் பரவலாக எதிர்கொள்ளும் பெரும்பாலான உடல் கோளாறுகளில்  மூட்டுவலியும் ஒன்று. இது எல்லா வயதிலும் ) உள்ள ஆண், பெண் என இருபாலரையும் சமமாக பாதிக்கிறது (வயதானவர்களிடம் இது அதிகமாக உள்ளது).  இந்தியாவில் மூட்டுவலி என்பது ஒரு மிகப்பெரிய உடல் கோளாறாகும். மூட்டுவலி குறித்த அனைத்து விவரங்களையும் நாங்கள் இங்கு அளித்திருக்கிறோம்.

மூட்டுவலிக்கான காரணங்கள்

மூட்டுவலியை ஏற்படுவதில் ஏராளமான காரணிகள் உண்டு. எனவே, ஒரு காரணத்தினால் மட்டுமே மூட்டுவலி வரும் என கூறமுடியாது. மூட்டுவலிக்கான காரணங்களில் கீழ்க்கண்டவையும் உள்ளடங்கும்:

  • ருமடாய்டு ஆர்த்ரைடீஸ்
  • ஆஸ்டியோஆர்த்ரைடீஸ்
  • கீல்வாதம்
  • லைம் நோய்
  • மேகவெட்டை நோய்
  • உடல்பருமன்
  • தோல் அழிநோய் எனப்படும் லூபஸ்
  • பலவீனம்
  • மூட்டு தளர்வு
  •  நாண் உரைப்பை அழற்சி எனப்படும் பர்ஸிடிஸ்
  • ஆன்கிலோஸிங் ஸ்பாண்டிலிடிஸ் எனப்படும்
  • எலும்பு புற்றுநோய்

மேற்கூறப்பட்ட பெரும்பாலான காரணங்களில் முக்கியமான ஒன்று ருமடாய்டு ஆர்த்ரைடீஸ் ஆகும்உண்மையில் இந்தியாவில் மூட்டுவலியை ஏற்படுத்துவதில் ருமடாய்டு ஆர்த்ரைடீஸுக்கு பெரும் தொடர்பு உள்ளது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

WHO-ILAR COPCORD மிகப்பெரிய அளவில் நடத்திய ஆய்வில் ருமடாய்டு ஆர்த்ரைடீஸுடன் இந்தியாவில் வாழும் மக்களின் எண்ணிக்கை 4.25 மில்லியனாகும்

(ஆதாரம் ; http://indianexpress.com/article/explained/over-4-mn-indians-could-be-living-with-chronic-joint-pain/)

ருமடாய்டு ஆர்த்ரைடீஸ் பற்றி நாம் அறிந்துகொள்ள முற்படுவோம்.

ருமடாய்டு ஆர்த்ரைடீஸ் எனப்படும் தன் தடுப்பாற்றல் நோயானது எதிர்ப்புத்திறன் தவறாக உடல் திசுக்களை தாக்கத்துவங்கும்போது குறிப்பாக சவ்வுகள் (மூட்டு சவ்வு படலங்கள்) வீங்கும்போது ஏற்படுகிறது.

இந்த நிலையானது மூட்டுகளின் படலத்தை பாதித்து வலியுடனான வீக்கத்தை ஏற்படுத்துகிறது சரியான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் நோய் பாதிப்பு அதிகமாகி எலும்பு அரிப்பு மற்றும் மூட்டு உருமாறும் குறைபாடு ஆகியவற்றை ஏற்படுத்திவிடும்.

நோயின் தாக்கத்தைப் பொறுத்து ருமடாய்டு ஆர்த்ரைடீஸ் உடலின் அனைத்து மூட்டுக்களையும் தாக்கக்கூடும். உடலில் உள்ள ஏராளமான மூட்டுகளில், முழங்கால் மூட்டு மிக அதிகமாக பாதிக்கப்படுவதால் ருமடாய்டு ஆர்த்ரைடீஸ் நோயாளிகள் முழங்கால் வலியால் பெரிதும் அவதிப்படுகின்றனர்.   முழங்கால் வலி கடுமையாகவும் நாள்பட்டதாகவும் இருக்கும்.  ஒவ்வொரு மாதமும் அல்லது இரண்டு மாதத்திற்கு ஒரு முறை என வரக்கூடும். சிலர் ஒரே மாதத்தில் பல முறை அதனால் அவதிப்படக்கூடும்.

முழங்கால் வலி ஒரு விதமான அசௌகரியத்தை ஏற்படுத்துவதோடு ஒரு நபரின் சீரான இயக்கத் திறனையும் குறைத்துவிடுகிறது. முழங்கால் வலி என்பது பொதுவாக வயதானவர்களை, முதியோர்களைத்தான் பாதிக்கும் என்றிருந்தாலும் சில சமயங்களில் இளம் வயதினரும் அந்த நிலைக்கு தள்ளப்படலாம். ஒருசிலருக்கு முழங்காலின் ஒரு பகுதியில் வலியும் சிலருக்கு முழங்கால் முழுவதுமே வலியும் இருக்கக்கூடும். பெரும்பாலானவர்களுக்கு முழங்கால் வலியில் தொடர்ச்சியாக கவனம் செலுத்தவேண்டியிருக்கும் . ஒரு சிலர் விரைவாகவும் குணமடைவார்கள்.

ருமடாய்டு ஆர்த்ரைடீஸ் தவிர, உடல்பருமன் மற்றும் அதிக எடை ஆகியவையும் முழங்கால் வலிக்கு காரணமாகிவிடுகிறது. உடல் எடை அனைத்தையும் தாங்கவேண்டிய இடத்தில் முழங்கால் அமைந்துள்ளது. எனவே முழங்கால் தொடர்ச்சியாக பாரத்தையும் அழுத்தத்தையும் தாங்கவேண்டியுள்ளது.  உடல் எடையினால் முழங்கால் மூட்டில் ஏற்படும் உராய்வு,  திசுக்கள் மற்றும் தசைநார்களின் தேய்மானத்திற்கு வழிவகுத்துவிடுகிறது. இது வலி மற்றும் வீக்கத்தை அளிப்பதோடு மூட்டுகளின் ஆரோக்கியத்தையும் குறைத்துவிடுகிறது.

சிக்கல்கள்

மூட்டுவலி, முழங்கால் வலி ஆகியவை மிகவும் மோசமான பாதிப்பு என இல்லாவிட்டாலும், தினசரி செயல்பாடுகளை முடக்கும் வகையில் இயக்கத்தில் அசௌகரியத்தை ஏற்படுத்திவிடுகிறது.  மூட்டுவலி தொடர்பான சில சிக்கல்கள் பின்வருமாறு.

  • நிரந்தர முழங்கால் சேதம் பாதிப்பு
  • உடல்ரீதியான திறன்குறைவு
  • முழங்காலில் நிரந்தர ஸ்திரத்தன்மை இல்லாமை
  • இயக்கத்தில் இழப்பு அல்லது திறன்குறைவு
  • முழங்கால் மூட்டின் உருமாற்றம்
  • . முழங்கால்களில் நிரந்தர உணர்வின்மை (மரத்துப்போதல்)

தடுக்கும் வழிகள்

அதிர்ஷ்டவசமாக முழங்கால் வலியைத் தடுப்பதற்கு அல்லது அந்த இடர்பாட்டைக் குறைப்பதற்கு ஏராளமான வழிகள் உள்ளன.  அவற்றில் கீழ்க்கண்டவையும் உள்ளடங்கும்.

  • துடிப்பான வாழ்க்கைமுறை

மந்தமான வாழ்க்கைமுறையானது மூட்டு வலி ஏற்படுவதற்கான மிகப்பெரிய காரணங்களில் ஒன்றாகும். செயல்பாடில்லாத வாழ்க்கைமுறை உடல்பருமன் மற்றும் அதிக உடல் எடைக்கு வழிவகுத்துவிடுகிறது. உடல் எடை அதிகரிக்க அதிகரிக்க முழங்கால் மூட்டுகளின் மீதான அழுத்தம் அதிகரிக்கிறது. துடிப்பான வாழ்க்கைமுறை மூட்டு வலியைத் தடுத்துவிடுகிறது. துடிப்பான வாழ்க்கை முறைக்கு தினசரி சீரான உடற்பயிற்சி அவசியமாகும். கார்டியோ போன்ற எளிய உடற்பயிற்சிகள் கூட மூட்டுகளை வலுவானதாகவும் ஆரோக்கியமானதாகவும் நீண்ட நாட்கள் வைத்திருக்கும். தொடர்ந்து உடற்பயிற்சி செய்தல் மற்றும் உடல் எடையை கட்டுக்குள் வைத்தல் ஆகியவை மூட்டு வலி சிகிச்சைக்கான மிகச்சிறந்த பலனைப் பெற்றுத்தரும்.

  • ஆரோக்கியமான மற்றும் சமச்சீரான உணவு

ஆரோக்கியமான உணவு மூட்டுவலியை  கிட்டே நெருங்கவிடாது. சில உணவுகள் வீக்கத்தை தடுக்கும் சிறப்பம்சங்களையும் சில உணவுகள் வீக்கத்தை ஏற்படுத்தும் தன்மையையும் கொண்டிருக்கும். வீக்கத்தைத் தடுக்கும் உணவுகளை தொடர்ச்சியாக எடுத்துக்கொள்வது மிக முக்கியமானதாகும். அதேசமயம் வீக்கத்தை ஏற்படுத்தும் உணவுகளை குறைத்துவிடுவதும் சிறந்த பலனைத் தரும்.

வீக்கத்தைத் தடுக்கும் உணவுப் பொருட்களில் தக்காளி, கீரை (கலே, கொலார்டு, பசலைக்கீரை) பல வண்ண பழங்கள் (ஆரஞ்சு, ப்ளூ பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி), கொழுப்பு நிறைந்த மீன் (சர்டைன், துனா, சால்மன், மக்கரெல்), பருப்புகள் (வால்நட்கள், பாதாம்) மற்றும் ஆலிவ் ஆயில் ஆகியவை உள்ளடங்கும்.

பதப்படுத்தப்பட்ட இறைச்சி, சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள், சோடாக்கள், பொறிக்கப்பட்ட உணவு வகைகள், பன்றிக்கொழுப்பு போன்றவை பொதுவாக வீக்கத்தை ஏற்படுத்தக்கூடியவையாகும்.

  • கடுமையான உடல் இயக்கத்தை தவிர்த்திடுங்கள்

கனமான பொருட்களைத் தூக்குவது, தொடர்ச்சியாக ஓடுவது அல்லது மிதமாக ஓடுவது அல்லது நிற்பது முழங்கால் மீதான அழுத்தத்தை அதிகரிப்பதால் தொடர்ச்சியான வலியை அது ஏற்படுத்தக்கூடும். முழங்கால் மூட்டுகளுக்கு அதிக அழுத்தம் தரக்கூடிய செயல்களைத் தவிர்த்திடுங்கள். அல்லது மூட்டுகளின் தசைகள் மற்றும் திசுக்களை இணக்கமாக்க சிறிது ஓய்வெடுங்கள் அல்லது ஸ்ட்ரெச் செய்யுங்கள்.

சிகிச்சை

மூட்டுவலிக்கு சிகிச்சையின் மூலம் நிவாரணம் பெறமுடியும் என்பது நிம்மதியை அளிக்கும் ஒன்றாகும்.

மூட்டுவலிக்கு ஏராளமான சிகிச்சைத் தேர்வுகள் கிடைக்கின்றன.

மிகச்சிறந்த பலனளிக்கும் மற்றும் பொதுவாக விரும்பப்படும் சிகிச்சைத் தேர்வுகள் கீழே வழங்கப்பட்டுள்ளன.

  • மசாஜ்

மூட்டுகளின் வலியை விரைவாக குறைக்கும் ஆற்றல் மசாஜ் செய்வதில் கிடைக்கிறது. ஒரு நிபுணரின் உதவியுடனோ அல்லது தாங்களாகவே மசாஜ் செய்தும் பலனைப் பெறலாம்.

மூட்டுவலிக்கு வலி நிவாரணி எண்ணெயுடன் மசாஜ் செய்வது மிகச்சிறந்த பலனை அளிக்கும். அம்மாதிரியான வலியை வெகுவாகக் குறைக்கும் நிவாரணிதான் பங்கஜகஸ்தூரியின் ஆர்த்தோஹெர்ப் ஆயில். ஆர்த்தோஹெர்ப் ஆயில் 19 விதமான மூலிகைகளின் கலவையைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.

மூட்டுத் தசைகள் மற்றும் திசுக்களுக்கு மருத்துவகுணங்களை ஆற்றலுடன் அளிப்பதற்கு ஆர்த்தோஹெர்ப்-ல்  விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகிய இரண்டும்தான்  முக்கிய உட்பொருட்களாக இருக்கின்றன,

வலியிலிருந்து உடனடியாக நிவாரணம் அளிப்பதோடு, ஆர்த்தோஹெர்ப் மூட்டுகளை ஆரோக்கியமாக, இணக்கமாக மற்றும் வலுவானதாக மாற்றவும் உதவுகிறது.

  • மருந்து

மூட்டு வலியை குறைப்பதற்கும் அதற்கு சிகிச்சையளிப்பதற்கும் மருந்து உட்கொள்வது மற்றொரு ஆற்றல் மிக்க வழியாகும். ஒரே வகையான மருந்து அல்லது பல மருந்துகள் சேர்ந்து அளிப்பதன் மூலம் மூட்டுவலிக்கு நிவாரணம் அளிக்கமுடியும். OTC (பரிந்துரையின்றி கடைகளில் வாங்குவது) மருந்துகள் மூட்டு வலி நிவாரணத்திற்கு மிகவும் ஆற்றல் வாய்ந்தது.

பங்கஜகஸ்தூரியின் ஆர்த்தோஹெர்ப் டேப்லெட் 23 மூலிகைகளிலிருந்து தயாரிக்கப்பட்டுள்ளதால் அனைத்துவிதமான மூட்டு வீக்க பிரச்சினைகளிலிருந்தும் நிவாரணம் அளிக்கிறது.

ஆர்த்தோஹெர்ப் டேப்லெட்கள்  சவ்வு வீக்கம் மற்றும் திரவத்தை சரிசெய்வதன் மூலம் வீக்கத்தையும் குறைத்துவிடுகின்றன.  இந்த மாத்திரைகளைப் பற்றி http://www.pankajakasthuri.in/otc/orthoherb-ல் தெரிந்துகொள்ளலாம்.

.ஆர்த்தோஹெர்ப் ஆயில் போலவே மாத்திரைகளும் வலியை நீக்குவதோடு மூட்டுக்களுக்கு வலுவூட்டுகின்றது.

மூட்டுவலியிலிருந்து நிவாரணம் பெற பங்கஜகஸ்தூரியின் இயற்கை மருத்துவத்தைத் தேர்ந்தெடுங்கள்.

பல்வேறு விதமான உடல் பிரச்சினைகளுக்கு நாங்கள் இயற்கை மருத்துவம் அளிக்கிறோம்.  அதிக வருடங்களான அனுபவம் மற்றும் சிகிச்சையளிப்பதில் நாங்கள் மேற்கொண்ட ஆய்வு மற்றும் மேம்பாடுகள் ஆகியவற்றினால் உங்களை மிகச்சிறப்பாக குணமைடயச்செய்து உங்கள் வாழ்க்கையை ஆரோக்கியமாகவும் ஆனந்தமாகவும் நாங்கள் மாற்றுகிறோம்.